×

Hostel

வெளியூர் மாணவியர்கள் எம் பள்ளியில் படிப்பதற்கு வசதியாக, " மாணவியர்விடுதி " பள்ளி வளாகத்திற்குள்ளேயே இயங்கி வருகிறது. விடுதியில் 100 மாணவியர்கள் தங்கிப் படிக்கும் வகையில் அனைத்து 'நவீன' வசதிகளும் உள்ளன. மாணவியருக்கு ஊட்டச்சத்து மிக்க, ஆரோக்கிய உணவு வகைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவியருக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. மாணவியர்களுக்கு கல்வியோடு நல்லொழுக்கங்கள் மற்றும் நற்பண்புகளும் கற்றுத்தரப்படுகிறது.


மாணவிகளுக்கு

  1. காலை மாலை வேளைகளில் நடைபெறும் கடவுள் வணக்கக் கூட்டத்திற்கு தவறாது வர வேண்டும்.
  2. படிக்கும் நேரத்தில் எல்லா மாணவியரும் அமைதியாகப் படிக்க வேண்டும்
  3. தங்களின் அறையையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
  4. விடுமுறை நாட்களில் விடுதி மாணவியர் பள்ளிகூடத்திற்கு ஆசிரியர் அனுமதியில்லாமல் போகக் கூடாது.
  5. ஒவ்வொரு மாணவியும் தான் வைத்திருக்கும் எல்லாத் துணிகளிலும் முழுப்பெயரையும் குறியிடும் மையினால் எழுதியிருக்க வேண்டும்.
  6. பள்ளிக்கூடத்தில்உள்ள மரம், செடிகள் இவற்றின் இலை, காய் முதலியவற்றை பறிக்கக் கூடாது.
  7. தங்களிடம் அதிகப் பணத்தை கையில் வைத்திருக்கக்கூடாது. விடுதிக்காப்பாளரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.
  8. விடுதி மாணவியர்கள் மற்ற மாணவியர்களை விடுதிக்குள் அழைத்து வரக்கூடாது.
  9. வெளி மாணவிகளிடம் கொடுத்து கடிதங்களை அஞ்சல் செய்யவோ, பொருட்களை அனுப்பவோ கூடாது.
  10. விடுதி கட்டணத்தொகையை ஆங்கில மாதம் 5ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும்.

பெற்றோர்களுக்கு,

  1. விடுதி மாணவியரைச் சந்திக்க பார்வையாளர்கள் பள்ளிநாட்களில் வரக் கூடாது.
  2. பார்வையாளர்கள் விடுதிக்குள் செல்லக் கூடாது.
  3. இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  4. பார்வையாளர்களாக தாய், தந்தை அல்லது கார்டியன் இருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மற்ற உறவினர்கள் பார்க்க விரும்பினால் அவ்விருவரோடு சேர்ந்து வரலாம். 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அனுமதி இல்லை.
  5. பார்வையாளர்கள் தலைமையாசிரியரிடமோ, விடுதிக்காப்பாளரிடமோ அனுமதி பெறாமல் மாணவிகளைச் சந்திக்கக்கூடாது.
  6. Visiting card இல்லாமல் வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

10 முதல் 12 ம் வகுப்பு மாணவியர்களுக்கு

6 முதல் 9 ம் வகுப்பு மாணவியர்களுக்கு

சனி மற்றும் ஞாயிறு நாட்களில்