×

பள்ளிச் சின்னம்

logo

மத்திய தீபம் – மாணவி
மூன்று கதிர்கள் – மாணவியின் ஆன்ம , மனோ, சரீர வளர்ச்சிகள்
ஒன்பது சிட்டி விளக்குகள் – மாணவியரோடு பழகி வாழும் ஏனையோர்
உட்கருத்து
திரியும், எண்ணெயும் எரிய வெளிச்சம் தோன்றி, தன்னை அடுத்துள்ள பொருளை விளக்குவது போன்று, மாணவியின் அகவிருள் முதற்கண் அகல, அவள் முழுவளர்ச்சியும் பெற்று சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தீபமாகத் துலங்குகிறாள். சுற்றிலுமுள்ள பல சிட்டிகள் தீபத்திலிருந்து வெளிச்சம் பெறுவது போன்று, கல்விச் சுடராம் ஒளிதனைப் பெற்ற மாணவி, தான் பெற்ற ஒளிதனை அயலகத்தாரும் பெற்று ஒளிருமாறு முயல்வதைத் தன் கடமையெனக் கொள்கிறாள். மாணவியிடமிருந்து கல்வி ஒளியைப் பெற்ற மக்கள் மென்மேலும் அவ்வொளியைப் பரந்தவுலகில் பரப்புகின்றனர்.

 பள்ளியின் சட்ட வாக்கு – “அன்பின் சேவை “