×

KOGA

க்ஷத்திரிய மகளிர் பள்ளிகளின் பழைய மாணவியர் சங்கம் 1953ம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டு செயலாற்றி வருகிறது. சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 787 பேர், அதில் 307 பேர் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். பழைய மாணவியரின் சங்கக்கூட்டம் ஒவ்வொரு பருவத்திலும் கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. சங்கத்தின் ஜெனரல் பாடிமீட்டிங்கில் சங்கத்தை வழிநடத்த தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் இரண்டு வருடத்திற்கான பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்படுவர்.

ஒவ்வொரு கல்வியாண்டின் ஜூலை மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை’ பழைய மாணவியர் தின விழாவும் ஜனவரி மாதத்தில் பழைய மாணவியர் திருவிழாவும் கொண்டாடப்படும். இவ்விழாவில் க்ஷத்திரிய மகளிர் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவியருக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையும் பள்ளிச் சீருடையும் வழங்கப்படுகிறது. X மற்றும் XII வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியின் முதன்மை மதிப்பெண் பெறும் மாணவியருக்கும், X வகுப்பில் தமிழ் வழியில் பயின்று முதன்மை மதிப்பெண் பெறும் மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

VIIIம் வகுப்பில் இரண்டாம் மதிப்பெண் பெறும் மாணவிக்கு பரிசும், விளையாட்டில் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவில் விளையாட வாய்ப்பு பெறும் மாணவியருக்கு பதக்கமும் வழங்கப்படுகிறது. பள்ளிச் செயல்பாடுகளில் திறம்பட பங்கு பெற்று சிறந்து விளங்கும் மாணவிக்கு ‘Best outgoing student’ என்ற பாராட்டும் பரிசும் வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியைகள் மற்றும் க்ஷத்திரிய மகளிர் பள்ளியில் பயின்று ஆசிரியைகளாகப் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களையும் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.இவ் விழாவில் பழைய மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. மதியவிருந்துடன் விழா இனிதே நிறைவு பெறும்.