பள்ளி வரலாறு
1910-ம் ஆண்டு உயர்திரு. தி .அ . திருவாலவாய நாடார் அவர்கள் விருதுநகரில் பெண்கள் படிப்பதற்கு தனிப் பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் கொண்டு, உள் தெருவில் தற்போது மார்கெட்டாயிருந்து வரும் வில்லான் சின்னக்கருப்ப ஞானியார் மச்சு என்ற கட்டிடத்தில் இரண்டு வகுப்புகள் கொண்ட பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இந்த இந்து நாடார் பெண் பாடசாலைக்கு ஸ்ரீ வாலசுப்பிரமணிய தேவஸ்தான கமிட்டியார் பண உதவி செய்து வந்தனர் .
மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் ஸ்ரீ வாலசுப்பிரமணிய தேவஸ்தான கமிட்டி தேவையான பண உதவி செய்ய முடியவில்லை. 1914-ம் ஆண்டு தூத்துக்குடி மகமை பண்டு டிரஸ்டிகளான திருவாளர்கள் தே . அ. ச. அய்யம்பெருமாள் நாடார் அவர்களும், அ பு. சங்கரலிங்க நாடார் அவர்களும் தூத்துக்குடி மகமை பண்டிலிருந்து பெண்பாடசாலையை நடத்தி வர ஒப்புக்கொண்டனர். திரு. சி. ச. சுப்பையா நாடார் அவர்களை செயலாளராகக் கொண்டு மூன்றாம் வகுப்பு ஏற்படுத்தி நடத்தி வந்தார்கள். 1916-ம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு வரை வளர்ந்தது. அப்பொழுது ‘க்ஷத்திரிய பெண் பாடசாலை’ என்று பெயர் வழங்கப்பட்டது.
1917 முதல் 1921 வரை திரு. அ . பு .சங்கரலிங்க நாடார் அவர்கள் செயலாளராய் இருந்த போது ஆறாம் வகுப்பு ஏற்படுத்தப்பட்டது. 1921 – 1934 வரை திரு. பெ. சி. சிதம்பர நாடார் செயலாளராய் இருந்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கினார். 1922ல் ஏழாம் வகுப்பு ஏற்பட்டது.
திரு. வே. வ. வன்னியப் பெருமாள் நாடார் அவர்களின் பெரு முயற்சியால் அரிசிக்கடை மகமைத் தரப்பிலிருந்து தேவஸ்தான நிலத்தில் சுமார் ரூ.25000 செலவில் க்ஷத்திரிய மகளிர் நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. 475 மாணவிகள் பயின்றனர்.
1934ல் திரு. வா. அ. கந்த நாடார் B.A.B.L செயலாளராய் இருந்தார். 1935ல் கல்விப் பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட குமாரி.திலகவதிப்பால் B.A.L.T. தலைமையாசிரியையாக நியமிக்கப்பட்டார். எட்டாவது வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பெற்றோர் பலர், தம் பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பள்ளிக்கு அனுப்பியதால் 12 வயதிற்குள் அவர்கள் எட்டாம் வகுப்பு முடிப்பதற்கு ஏதுவாக இன்ஸ்பெக்ட்ரஸ் திருமதி. டிஸீசா அம்மையார் அவர்கள் கீழ் வகுப்புகளில் அரைவருடத் தேர்விலேயே வகுப்பு மாற்ற ஏற்பாடு செய்தார். 1936ல் எட்டாம் வகுப்பில் 17 மாணவியர் பயின்று தேர்ச்சியடைந்தனர்.
1949ல் சென்னை , விருதுநகர் நாடார் மேன்ஷன் வருவாயும், நிர்வாகமும் பள்ளி மானேஜிங் போர்டுக்கு மாற்றப்பட்டது .விருதுநகர் நகராண்மைக் கழகத் தலைவர்.
“ராவ் பகதூர்” திரு.v.v.இராமசாமி அவர்கள் முயற்சியால் ரூ.3500/ நன்கொடை வசூலிக்கப்பட்டது. கிருஷ்ணமாச்சாரி ரோட்டில் தேவஸ்தான அன்பளிப்பான 5 ஏக்கர் நிலத்தில் ரூ .1,25,000 செலவில் பள்ளிக்குப் புதுக்கட்டிடம் கட்டப்பட்டது.
1945ஆம் ஆண்டு ஐந்தாவது படிவமும், 1946ல் ஆறாம் படிவமும் ஆரம்பிக்கப்பட்டன. 22 மாணவியர் S.S.L.C. தேர்வுக்கு அனுப்பப்பட்டு நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற்றனர்.1950ல் வெளியூர் மாணவியரும் தங்கிப் படிக்க வசதியாக திரு.கா.சு.அ.ப.சுப்பிரமணியநாடார் – பழனியம்மாள் ஞாபகார்த்த மாணவியர் விடுதி கட்டப்பட்டது .
க்ஷத்திரிய மகளிர் உயர்தர ஆரம்பப் பள்ளியில் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்ததால், விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த குருநாதன் கோவில் தோட்ட நிலத்தில் 1-8-1953ல் ச.வெள்ளைச்சாமி நாடார் அண்ணாமலையம்மாள் ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. திரு.ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் ரூ 20000/- நன்கொடை கொடுத்தார்கள்.
1953-ம் ஆண்டில் க்ஷத்திரிய மகளிர் உயர்நிலைப் பள்ளியில் திரு.வெ.நா.மு.நாகலிங்க நாடார் – தேனம்மாள் அவர்களின் மகள் மீனம்மாள் ஞாபகார்த்தமாக குடும்பப் பயிற்சி வகுப்பறைக் கட்டப்பட்டது. செயல்முறைப் பயிற்சிக்காக சமையல் அறையும் விருந்தினர் விடுதியும் கட்டப்பட்டது. உயர்நிலைப் பள்ளியில் மேல்மாடியில் 5 வகுப்பறைகள் கட்டப்பட்டன. 1957ல் க்ஷத்திரிய மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ரூ 51000 செலவில் கலையரங்கம் கட்டப்பட்டது. 1957 முதல் 1960 முடிய உயர்திரு.T.M.M.ராஜக்கனி நாடார் செயலராகப் பணியாற்றினார்.1957-58ல் உயர்நிலைப்பள்ளியில் மேல்மாடியில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. 5.7.57ல் ஓவியம் விசேஷப் பாடமாக ஏற்படுத்தப்பட்டதால் மேல் மாடியில் ரூ 21000 செலவில் சித்திரக்கூடம் கட்டப்பட்டு, முதலமைச்சர் உயர்திரு.கு.காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1958 ல் தலைமையாசிரியை குமாரி.திலகவதி பால் B.A.L.T. அவர்கள் 23 ஆண்டுகள் சீரிய பணிக்குப் பின் பதவி விலகவே, திறமை மிக்க திருமதி.A.P.ஜெயலட்சுமி M.A.B.T. அவர்கள், தலைமையாசிரியையாகப் பதவியேற்றார். 1960-63 உயர்திரு.A.S.K.ராமசாமி நாடார் அவர்கள் செயலராக பணியாற்றினார் . 1961 ஜனவரியில் நம் பள்ளிகளின் பொன்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1962 ல் உயர்நிலைப் பள்ளியின் மேல்மாடியில் நான்கு வகுப்பறைகளும், மையஹாலும் கட்டப்பட்டு ,விஞ்ஞானப் பகுதிக் கட்டிடம் ரூ 49117 செலவில் கட்டப்பட்டு, முதலமைச்சர்.உயர்திரு.கு.காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1963-66 முடிய உயர்திரு. V.A.A.சங்கரபாண்டியன் அவர்கள் காரியதரிசியாகத் தொண்டாற்றினார். 1963ல் க்ஷத்திரிய உயர்தர ஆரம்பப் பாடசாலையின் வடக்குப்பக்கத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. ச.வெ. அண்ணாமலையம்மாள் உயர்தர ஆரம்ப பாடசாலையின் மேல் மாடியில் 5 வகுப்பறைகள் கட்டப்பட்டன.
க்ஷத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவியர் விடுதி, மத்திய சர்க்காரின் மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களது சிறுவர் சிறுமியருக்காக க்ஷத்திரிய நர்சரி ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டது. 1964ல் ச.வெ. அண்ணாமலையம்மாள் பள்ளியில் சமையலறைக் கட்டிடம் கட்டப்பட்டது. க்ஷத்திரிய உயர்தர ஆரம்பப் பாடசாலையில், 1965ல் ப்ளஸ் அவுட் கக்கூஸ் , வாட்டர் டேங், சறுக்கு முதலியன கட்டப்பட்டன. 1966-68ல் உயர்திரு. O.T.S.V.தர்மர் நாடார் அவர்கள் செயலராக அருந்தொண்டாற்றினார்.
பிலவங்க ஸ்ரீ ஆனி மீ2 19உ முதல் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு 66 நிர் கட்டிடத்தோடு சேர்ந்து பின்புறம் காம்பவுண்டுக்குள் உள்ள காலியிடத்தையும் அவ்வாண்டு ஆவணி 19 முதல் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு 17 வது வார்டு 71 நிர் வீட்டையும் தூத்துக்குடியிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் தர்மபரிபாலன சபையின் தலைவர் நமது க்ஷத்திரிய கெர்ள்ஸ் ஸ்கூல்ஸ் மானேஜிங் போர்டுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.
சென்னையிலுள்ள விருதுநகர் நாடார் மேன்சன் வெள்ளி விழா 30-12-67ல் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது. அச்சமயம் புதுக் கட்டிடத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கனம். கு.காமராஜர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
1968 முதல் 1970 முடிய உயர்திரு. S.S.S.சுந்தரபாண்டியன் அவர்கள் பள்ளிச் செயலராகப் பணி புரிந்தார். க்ஷத்திரிய மகளிர் பள்ளிகளின் வைர விழா சீரும் சிறப்புமாக மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.
1970-72 உயர்திரு. V.A.சங்கரபாண்டியன் அவர்கள் செயலராகப் பணியாற்றினார்.
1973-1974 ல் உயர்திரு. V.V.S. பாண்டுரங்கன் அவர்கள் செயலராகப் பணிபுரிந்தார். க்ஷத்திரிய மகளிர் உயர்நிலைப் பள்ளியில் விஞ்ஞானப் ஆய்வுக்கூடத்தின் மேல்மாடியில் K.G.S.வைரவிழா ஞாபகார்த்த பழைய மாணவியர் கட்டடம் கட்டப்பட்டது.
1975,76ல் உயர்திரு. O.T.S.V. தர்மர் நாடார் அவர்கள் செயலராகப் பணிபுரிந்த போது பெ.சி.சிதம்பர நாடார் சென்ட்ரல் ஸ்கூல் கிண்டர் கார்டன் வகுப்பை உயர்திரு.பெ.சி.சிதம்பர நாடார் பேரன் உயர்திரு. A.செல்வராஜன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். உயர்நிலைப் பள்ளி அசெம்பிளி ஹாலில் மேற்குப் பக்க வராண்டா கட்டிடம் கட்டப்பட்டது.
1977,1978 ஆகிய ஆண்டுகளில் உயர்திரு. M.A.P.ராமமூர்த்தி அவர்கள் செயலராகப் பணிபுரிந்தார்.
1979 – 80ல் பள்ளி வளர்ச்சியே தனது மூச்சாக கொண்ட உயர்திரு. O.T.S.V. தர்மர் நாடார் அவர்கள் செயலாளராகப் பணியாற்றினார். க்ஷத்திரிய மகளிர் மேல் நிலைப் பள்ளி அறிவியல் ஆய்வுக்கூட வகுப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.
1981 – 82ல் கலையார்வமும், செயலாற்றும் திறனும் மிக்க உயர்திரு. P.P.M.S. நாகராஜன் B.A. அவர்கள் செயலாளராகப் பணிபுரிந்தார். மேல் நிலைப் பள்ளியில் பௌதீக ஆய்வுக் கூடமும் ,வகுப்பறைகளும் கட்டப்பட்டன. தந்தையை ஒப்பவே அரும்பணியாற்றும் ஆர்வத்துடன் 1983ல் உயர்திரு.V.N.M.S.A. சௌந்திர பாண்டியன் B.A. அவர்கள் செயலாளரானார்.
1985ல் உயர்திரு P.P.M.S நாகராஜன் B.A அவர்கள் செயலாளரானார். 1986 ஜனவரியில் பவளவிழா ஐந்து நாட்களுக்கு மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
1986ம் ஆண்டு உயர்திரு. O.T.S.V. தர்மர் நாடார் அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1988 ம் ஆண்டு பவள விழா நூல் நிலையக் கட்டடமான “சிவராமலிங்கம் நினைவு வாசகசாலை” கட்டப்பட்டது . 1988-1989 ம் கல்வியாண்டில் தலைமையாசிரியை திருமதி.A.P.ஜெயலட்சுமி M.A.,M.Ed., அவர்கள் பணிநிறைவு பெற்றார்.
1988ம் ஆண்டு உயர் திரு. V.M .G. ராஜசேகரன் அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1.6.1989 அன்று திருமதி.C. கெங்கேஸ்வரி M.A., M.Ed., அவர்கள் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்றார். ஜூலை 10, 1989ம் ஆண்டு மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரின் சார்பில் 37 ஆண்டுகள் சீரிய முறையில் பணிபுரிந்து பணிநிறைவு பெற்ற திருமதி A.P. ஜெயலட்சுமி M.A. M.Ed., அவர்களுக்குப் பிரிவு உபசார விழா சிறப்புடன் நடத்தப்பட்டது.
இவ்விழாவிற்கு Dr. சாலை இளந்திரையன் அவர்கள் தலைமையேற்றார்.
1990 ம் ஆண்டு உயர்திரு. M.S .N . ஜெயராமன் அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 21.8.1991 அன்று கும்பகோணத்திலிருக்கும் விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி மகமைப்பண்டு நன்கொடைக் கட்டிடத்தில் புதிய மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டது. 1991ம் ஆண்டு தலைமையாசிரியை திருமதி. c. கெங்கேஸ்வரி M.A., M.Ed., அவர்கள் “நல்லாசிரியர் விருது ” பெற்றமைக்காக மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரால் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு திருமதி. S.P.G.C. நாகம்மாள் அவர்கள் தலைமையேற்றார். 1991-1992 ம் கல்வியாண்டில்
தலைமையாசிரியை திருமதி. C. கெங்கேஸ்வரி M.A., M.Ed ., அவர்கள் பணிநிறைவு பெற்றார். 1.6.1992 ல் திருமதி. D. நாகேஸ்வரி M.Sc., M.Ed., M.Phil., அவர்கள் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்றார். 2.8.1992 அன்று கும்பகோணத்திலிருக்கும் விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி மகமைப்பண்டு நன்கொடைக் கட்டிடத்தில் பிரார்த்தனைக் கூடம் மற்றும் முதல்மாடி வகுப்பறைக் கட்டிடம் கட்டப்பட்டது. 31.8.1992 அன்று மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரின் சார்பில் 34 ஆண்டுகள் சீரிய முறையில் பணிபுரிந்து பணிநிறைவு பெற்ற திருமதி. C. கெங்கேஸ்வரி M.A., M.Ed., அவர்களுக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
1992 ம் ஆண்டு உயர்திரு. C. சண்முகப்பிரியா அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1993 ம் ஆண்டு கும்பகோணத்திலிருக்கும் விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி மகமைப்பண்டு நன்கொடைக் கட்டிடத்தில் இரண்டாம் மாடிக் கட்டடம் கட்டப்பட்டது.
19.12.1993 அன்று சென்னை நாடார் மேன்சன் இரண்டாம் மாடிக் கட்டடம் கட்டப்பட்டது.
1994 ம் ஆண்டு உயர்திரு. P.A.P.ராஜமோகன் அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். பதினொன்றாம் வகுப்பில் I C சுயநிதிப்பிரிவு தொடங்கப்பட்டது. அப்பிரிவு மாணவியர்கள் பயில்வதற்கென கணிப்பொறி அறை 21.6.1995 ல் திறந்து வைக்கப்பட்டது.
1996 ம் ஆண்டு உயர்திரு. M.ராதாகிருஷ்ணன் அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 26.6.1998 அன்று உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது . உபதலைவர். உயர்திரு. P.N.R. சூரிய நாராயணன் B.Com.,அவர்களின் முயற்சியால் இசைக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
1998 ம் ஆண்டு உயர்திரு. K.R.M.G. குணசேகரன் B.Com., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 27.8.2000 அன்று புதிய இயற்பியல் ஆய்வுக் கூடம் கட்டப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ விஜய விநாயகர் திருக்கோவில் கட்டப்பட்டது.
2000ம் ஆண்டு உயர்திரு. P.N.R. சூரியநாராயணன் B.Com., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 4.6.2001 அன்று இரண்டு கணினி ஆய்வுக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 3.8.2001 அன்று “ KSHATRIYA GIRLS’ SCHOOL OF MERIT ” தொடங்கப்பட்டது. க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெ. சி. சிதம்பர நாடார் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவியர்களில் 1000க்கும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. 10.6.2002 அன்று V.P.M. அமிர்தலிங்கம் – ஜோதியம்மாள் கணினி அறிவாலயம் மற்றும் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டது.
2002 ம் ஆண்டு உயர்திரு. M.A.P.R. ரெங்கசாமி M.Com., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். பள்ளியில் இன்டர்காம் வசதி செய்யப்பட்டது.
2004 ம் ஆண்டு உயர்திரு.T.M.M.R. ரத்தினசாமி அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 4.9.2006 அன்று N.D.முருகன் வளாகம் – அபிவிருத்தி பஞ்சுக்கடை மகமை மீட்டிங்ஹால் மற்றும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது. 5.9.2006 அன்று தலைமையாசிரியை
திருமதி D. நாகேஸ்வரி M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றார். 23.2.2007 அன்று அன்னார்க்கு மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை திருமதி. A.P. ஜெயலட்சுமி M.A., M.Ed., அவர்கள் தலைமையேற்றார்.
2006 ம் ஆண்டு உயர்திரு.A.K.ராஜாக்கனி அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2007-2008 ம் கல்வியாண்டில் தலைமையாசிரியை
திருமதி. D. நாகேஸ்வரி M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் பணிநிறைவு பெற்றார். 4.6.2007 அன்று திருமதி. S. ராஜசௌந்தரி M.Sc., M.Ed., அவர்கள் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்றார். 2007 ஆம் ஆண்டு மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினர் சார்பில் 28 ஆண்டுகள் சீரிய முறையில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற திருமதி. D.நாகேஸ்வரி M.Sc., M.Ed., M.Phil ., அவர்களுக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. 2007 ம் ஆண்டு இயற்பியல்
ஆய்வுக்கூடத்தில் மேல்மாடி வகுப்பறைகள் கட்டப்பட்டது.
2008ம் ஆண்டு உயர்திரு. S. N. B. K. சிவராஜன் B.Com., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார் . 21.10.2009 அன்று S.N.B. கண்ணன் – காஞ்சனா நிர்வாகக்கட்டிடம் கட்டப்பட்டது. 27.10.2009 அன்று க்ஷத்திரிய மகளிர் பள்ளிகளின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. 31.10.2009 அன்று நூற்றாண்டுவிழா நினைவுமண்டபம் கட்டப்பட்டது. 2010 ம் ஆண்டு பள்ளியின் நூற்றாண்டுவிழா சீரும் சிறப்புமாக ஐந்து நாட்கள் கொண்டாடப்பட்டது. 25.2.2010 அன்று விருதுநகர் இந்து நாடார்களின் அபிவிருத்தி பலசரக்குக் கடை மகமைக் கட்டிடத்தின் வலது புறத்தில் கீழ்தளம் மற்றும் முதல் மாடியில் ஆறு வகுப்பறைகள் கட்டப்பட்டது .
2010 ம் ஆண்டு உயர்திரு. P.C.S. நாராயணமூர்த்தி அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2012 ம் ஆண்டு பலசரக்குக்கடை மகமை வளாகத்தின் இடது புறத்தில் மூன்று DIGITAL வகுப்பறைகள் மற்றும் நூலகத்தின் மாடியில் MULTIPURPOSE HALL கட்டப்பட்டது.
பள்ளி ஸ்தாபகர் உயர்திரு. தி .அ . திருவாலவாய நாடார் அவர்களின் சிலை அமைக்கப்பட்டது. முனைவர் திருமதி. S. சரோஜா பாண்டியன் நினைவு
” 125 KVA GENERATOR ” Dr. புகழேந்தி பாண்டியன் அவர்களால் வழங்கப்பட்டது.
2012 ம் ஆண்டு உயர்திரு. Rm.P.T.R. தனிக்கொடி B.Sc., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார் . 9.6.2014 அன்று Rm. P. T. ரவீந்திரன்- சீதாலட்சுமி அலுவலகக்கட்டிடம் மற்றும் பலசரக்கு மகமை வளாகத்தின் முதல் மாடியின் இடது புறத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டது .
2014 ம் ஆண்டு உயர்திரு. N. ஆனந்தவேல் B.E., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 5-9-2015ம் ஆண்டு தலைமையாசிரியை
திருமதி. s. ராஜசௌந்தரி M.Sc., M.Ed., M.Phil., அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றார். 2015 ம் ஆண்டு மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரின் சார்பில் அன்னாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 16.6.2016 அன்று பலசரக்குக்கடை மகமை வளாகத்தின் இரண்டாம் மாடியின் வலது புறத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டது .
2016 ம் ஆண்டு உயர்திரு.M.S.M.B. கூடலிங்கம் M.A., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2016 – 2017ம் கல்வியாண்டில் தலைமையாசிரியை திருமதி.S. ராஜசௌந்தரி M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் பணிநிறைவு பெற்றார். 2017 அன்று திருமதி. S. சாந்தி M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்றார். 03.08.2017 அன்று ” ATAL TINKERING LAB “ அன்று தொடங்கப்பட்டது. 12-08-2017 அன்று மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரின் சார்பில் 34ஆண்டுகள் சீரிய முறையில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற திருமதி. S. ராஜசௌந்தரி M.Sc.,M.Ed., M.Phil., அவர்களுக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. 27.8.2018 அன்று பலசரக்குக்கடை மகமை வளாகத்தின் இரண்டாம் மாடியின் இடது புறத்தில் மூன்று வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது. MESS HALL கட்டப்பட்டது.
2018 ம் ஆண்டு உயர்திரு. Rm.P.T.R. தனிக்கொடி B.Sc., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
S.S.L.C , H.S.C பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் முதன்மை, பாடவாரியாக முதன்மை மற்றும் H.S.C தேர்வில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதன்மை பெற்ற மாணவியருக்கு தங்க மெடல்கள் கொடுத்து வர Endowment ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் ஏழை மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள், தேர்வுக் கட்டணங்கள் அளிக்க Endowment ஏற்படுத்தப்பட்டுள்ளன.
“க்ஷத்திரிய பெண்கள் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாணவியர் மலர் வெளியிடப்படுகிறது.
நிர்வாகத்தினரின் ஊக்கத்தாலும், ஆர்வத்தாலும் பள்ளி சகலவசதிகளோடு விளங்குகிறது. தலைமையாசிரியை அவர்களின் சீரிய முயற்சியாலும், ஆசிரியர்களின் அயராத உழைப்பாலும், மாணவியர்கள் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளியை விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகத் திகழச்செய்கின்றனர். மேலும் கல்வி, விளையாட்டு, கலை போன்ற இணைச் செயல்பாடுகளிலும் முதன்மை பெற்றுத் திகழ்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மாநிலம் போற்றும் மாணிக்கங்களாகத் திகழ்கின்றனர்.