பள்ளி வளர்ச்சி
1910
உயர்திரு.தி.அ.திருவாலவாய நாடார் அவர்கள் விருதுநகரில் பெண்கள் கல்வி கற்க தனிப் பள்ளிக்கூடம் வேண்டும் என்ற ஆர்வத்தால் “இந்து நாடார் பெண் பாடசாலை” என்ற பெயரில் வில்லன் சின்னக்கருப்ப ஞானியார் மச்சு என்ற கட்டிடத்தில் முதலாம், இரண்டாம் வகுப்புகளை ஆரம்பித்தார்.
1914
மூன்றாம் வகுப்பு ஏற்படுத்தப்பட்டது.
1916
நான்காம், ஐந்தாம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பள்ளிக்கு “க்ஷத்திரிய பெண் பாடசாலை” என்ற பெயர் வழங்கப்பட்டது.
1922
ஏழாம் வகுப்பு தொடங்கப்பட்டது.
1932
க்ஷத்திரிய மகளிர் நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.
1935
எட்டாம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பள்ளி உயர்தர ஆரம்பப் பாடசாலையாக ஆனது.
1943
ஐந்தாம் வகுப்பு முதல் மூன்றாம் படிவம் வரைக் கொண்ட உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.
1944
நான்காம் படிவம் ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள் விடுதி கட்டப்பட்டது.
1945
ஐந்தாம் படிவம் தோன்றிற்று
1946
ஆறாம் படிவம் தொடங்கப்பட்டது.
1947
மார்ச் மாதத்தில் முதன் முறையாக S.S.L.C. தேர்வுக்கு 22 மாணவியர் அனுப்பப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றனர் .
1949
உயர்நிலைப் பள்ளிக் கட்டிடம், குருநாதன் கோவில் தோட்டத்தில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
1951
உயர்திரு.கா.சு.அ.ப.சுப்பிரமணிய நாடார் – பழனியம்மாள் ஞாபகார்த்த மாணவியர் விடுதி கட்டப்பட்டது. உயர்நிலைப்பள்ளி மேல்மாடியில் 5 வகுப்பறைகள் கட்டப்பட்டன .
1953
உயர்திரு.ச.வெள்ளைச்சாமி நாடார் – அண்ணாமலை அம்மாள் உயர்தர ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.உயர்நிலைப் பள்ளியில் குடும்பப் பயிற்சி விசேஷப் பாடமாக ஆரம்பிக்கப்பட்டதால் செயல் முறைப் பயிற்சிக்காக குடும்பப் பயிற்சி வகுப்பறை கட்டப்பட்டது. விருந்தினர் விடுதி
ஒன்று கட்டப்பட்டது.
1956
ச.வெ.அண்ணாமலையம்மாள் பள்ளிக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
1957
க்ஷத்திரிய மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 160’x 80′ அளவுள்ள கலையரங்கம் கட்டப்பட்டது.
1958
தலைமையாசிரியை குமாரி.திலகவதி பால் B.A.L.T. அவர்கள் 23 ஆண்டுகள் சீரிய பணிக்குப் பின் பதவி விலகவே, திறமை மிக்க திருமதி.A.P.ஜெயலட்சுமி M.A.B.T. அவர்கள், தலைமையாசிரியையாகப் பதவியேற்றார்.
1961
ஜனவரியில் பள்ளிகளின் பொன் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
1962
க்ஷத்திரிய மகளிர் உயர் நிலைப் பள்ளியின் மேல் மாடியில் 4 வகுப்பறைகளும், மைய ஹாலும் கட்டப்பட்டன. விஞ்ஞானப் பகுதிக் கட்டடம் கட்டப்பட்டது.
1963
க்ஷத்திரிய உயர்தர ஆரம்பப் பாடசாலையில் வட பக்கத்தில் 3 வகுப்பறைகள் கட்டப்பட்டன.
1964
க்ஷத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளியின் புது மாணவியர் விடுதி கட்டப்பட்டது.
1965
க்ஷத்திரிய நர்சரிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
1975
பெ.சி.சிதம்பர நாடார் சென்ட்ரல் ஸ்கூல் கிண்டர் கார்டன் வகுப்பை உயர்திரு.பெ.சி.சிதம்பர நாடார் பேரன் உயர்திரு.A.செல்வராஜன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
1980
க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆய்வுக்கூட வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.
1982
மேல்நிலைப் பள்ளியில் பௌதீக ஆய்வுக்கூடம் கட்டப்பட்டது.
1986
ஜனவரியில் பவளவிழா ஐந்து நாட்களுக்கு மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவியர் பவளவிழா ஞாபகார்த்த நூலகக் கட்டிடத்திற்கும், தியான அறைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.