Rules & Regulations
- தினமும் காலை 9 மணிக்கு இறை வணக்கக்கூட்டத்துடன் பள்ளி இனிதே துவங்குகிறது.
- தினமும் காலையில் 9.20 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் வகுப்புகள் ஆரம்பமாகிறது. மாணவியர்கள் பள்ளிக்குக் காலந்தாழ்த்தி வரக் கூடாது. தகுந்த காரணங்கள் இருந்தால் பெற்றோர் கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்துடன் வர வேண்டும்.
- மாணவியர் பள்ளிச்சீருடையில் தான் வரவேண்டும். எல்லா நாட்களிலும் நேர்வகிடு எடுத்து இரட்டைப் பின்னல் பின்னி, தமிழ் வழியில் கற்கும் மாணவியர்கள் சிவப்புரிப்பனும், ஆங்கில வழியில் கற்கும் மாணவியர்கள் வெள்ளைரிப்பனும் வைத்து மடித்துக் கட்டவேண்டும்
- கடவுள் வணக்கக் கூட்டத்திற்கு வராமல் எந்த மாணவியும் வகுப்பறையில் இருக்கக் கூடாது.
- முதல் மணி அடித்தவுடன் அவரவர் வகுப்பின் முன் வரிசையாக நிற்க வேண்டும். மாடியில் இருந்து வரும் மாணவியரும் வரிசையில்தான் வர வேண்டும்.
- கடவுள் வணக்கத்தின்போது கண்களை மூடி, கை கூப்பி நிற்க வேண்டும். கடவுள் வணக்கம் முடிந்து திரும்பும் போதும் வரிசையாக, அமைதியாகச் செல்ல வேண்டும்.
- விஞ்ஞானக்கூடம், விளையாட்டு மைதானம், சங்கீத வகுப்பு ஆகிய இடங்களுக்குச் செல்லும் போதும் வரிசையாகச் செல்ல வேண்டும்.
- காலை 8.30மணிக்கும், மதியம் 1.00 மணிக்கும் அவரவர் வகுப்பறையில்அமர்ந்து அமைதியாகப் படிக்க வேண்டும்.
- ஒரு பாடவேளை முடிந்து அடுத்த பாடவேளையின் ஆசிரியை வரும்வரை அனாவசியமாகப் பேசக் கூடாது.
- மாணவியர்கள் வகுப்பறையில் மௌனமாகப் படிக்க வேண்டும்.
- உடல்நலக்குறைவு, உடன் பிறந்தோர் திருமணம், வீட்டில் பேரிழப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் பள்ளிக்கு வர இயலாமல் போனால் விடுப்பு விண்ணப்பத்தை வகுப்பு ஆசிரியைக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர்களின் கையொப்பம் இல்லாத விடுப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
- ஒருநாளைக்கு மேல் விடுப்பு எடுப்பவர்கள் தலைமையாசிரியை அவர்களிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
- சிறு காரியங்கள் மற்றும் பள்ளி நேரத்திற்குப் புறம்பான நேரங்களில் செய்யக் கூடிய காரியங்களுக்கும் விடுப்பு எடுப்பது கூடாது.
- விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியையின் அனுமதியில்லாமல் வரக்கூடாது.
- உடற்பயிற்சி வகுப்பிற்குச் செல்லாவிட்டால் ஒரு பொழுது பள்ளிக்கு வராததாகக் கருதப்படும்.
- VI – XII வகுப்பு மாணவியர்கள் உடற்பயிற்சி வகுப்பு மற்றும் மாலை விளையாட்டு வகுப்பிற்கு விளையாட்டுச் சீருடையில் தான் செல்ல வேண்டும்.
- மாலை விளையாட்டு வகுப்பு முடிந்தவுடன் தாமதமின்றி வீட்டிற்குச் செல்ல வேண்டும்.மாலையில் பள்ளி முடிந்தவுடன் விளையாட்டு வகுப்பு இல்லாத மாணவிகள் உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
- பள்ளிக்கூடத்துப் பெஞ்சுகள், டெஸ்குகள், மேஜை, நாற்காலி போன்ற மரச் சாமான்களைப் பத்திரமாக உபயோகிக்க வேண்டும். பெஞ்சுகளின் மேல் ஏறி நடக்கவோ, அவற்றைச் சாய்த்து விளையாடவோ, பேனா மையை பெஞ்சுகளின் மேல் உதறவோ கூடாது.
- பள்ளிக்கூடத்தில் உள்ள மரங்கள், செடிகள் இவற்றின் இலை, காய், பூ முதலியவற்றைப் பறிக்கக் கூடாது
- மதிய உணவு வேளையின் போது உணவை வீணடிக்கக் கூடாது. உணவுக் கழிவுகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும்.
- பள்ளிவளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.
- குடிநீரில் சாப்பாடு பாத்திரம் கழுவி, நீரை வீணாக்கவோ, அசுத்தம் செய்யவோ கூடாது. எச்சில் செய்து தண்ணீர் குடிக்கக் கூடாது.
- சுவரில்சாய்ந்தோ, எழுதுகோலால் கிறுக்கியோ, சுவர் மற்றும் கழிப்பறைகளை அசுத்தம் செய்யக்கூடாது.
- பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்திக்கும் நேரம்- மதியம் 12:30 மணி மற்றும் மாலை 4:30 மணி.