×

Golden Memories

க்ஷத்திரிய பெண்கள் உயர் நிலைப் பள்ளியின் 36 வது ஆண்டுவிழாவின் போது உயர்திரு.K.காமராஜ் நாடார் M.L.A., அவர்கள் தலைமையில் கல்வி அமைச்சர் உயர்திரு.T.S.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் பள்ளிக் கட்டிடத்திற்கு அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது

1953 – 1954

Our Headmistress Miss. Thilagavathy Paul Participated in “Advanced Secondary Education Course ” 1953 – 54 Sponsored by United States Education Foundation of India, Mysore, April 5th to May 27th 1954

1966 – 1967

1966 – 1967 ல் இராமநாதபுரம் மாவட்ட தலைமை ஆசிரியர்கள் சார்பாக மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் பள்ளி தலைமை ஆசிரியை A.P. ஜெயலட்சுமி M.A., B.T.,

1969 – 1970

தமிழ்நாடு ஆசிரியர் கழகத்தின் (S.I.T.U )துணைத் தலைவராக (1969 – 1970 ) நடப்பு ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் தலைமை ஆசிரியை .

1974 – 1975

S.S.L.C தேர்வு (1974 – 1975)

பள்ளித் தலைமை ஆசிரியை A.P ஜெயலட்சுமி M.A., B.T.,அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வி சரோஜா M.A., L.T., அவர்களிடம் இருந்து  S.S.L.C தேர்விற்கான, மாவட்ட முதன்மைத் தேர்ச்சி சுழற்கேடயத்தைப் பெறுதல்.

1979 – 1980

S.S.L.C தேர்வு (1979 – 1980)

இராமநாதபுர மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளுள் மிக உயர்ந்த தேர்ச்சி சதவீதம் பெற்றமைக்காக பள்ளிக்கல்வி இயக்குநர் உயர்திரு. K. வேங்கட சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து நம் தலைமை ஆசிரியை அவர்கள் சுழற்கேடயம் பெறுகிறார் .

1980 – 1981

S.S.L.C தேர்வு (1980 – 1981)

இராமநாதபுர மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளுள் மிக உயர்ந்த தேர்ச்சி சதவீதம் பெற்றமைக்காக நமது மாவட்ட துணை ஆட்சியர் உயர்திரு.இராக்கேஷ்கக்கர் I.A.S. அவர்களிடமிருந்து நம் தலைமை ஆசிரியை அவர்கள் சுழற்கேடயம் பெறுகிறார் .

                                  1981 – 1982

S.S.L.C தேர்வு (1981 – 1982)

இராமநாதபுர மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளுள் மிக உயர்ந்த தேர்ச்சி சதவீதம் பெற்றமைக்காக நமது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி திருமதி.பாரதி B.S.c., B.T., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை அவர்கள் சுழற்கேடயம் பெறுகிறார் .

1984 – 1985

Our Headmistress receives the shield for Best School in Athletics 1984 – 1985.

 

1987

1987  மார்ச் S.S.L.C. &  H.S.C தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் நம் பள்ளி மாவட்ட முதன்மை பெற்றமைக்காக தலைமை  ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள்  சுழற்கேடயம் பெறுகிறார் .

1991 – 1992

1991 – 1992 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக , காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு M.G. கிட்டப்பன் M.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை  ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் பரிசுக் கோப்பை பெறுதல்

1992 – 1993

1992 – 1993 ல் S.S.L.C. &  H.S.C தேர்வுகளில் சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக , காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உயர்திரு.M.G. கிட்டப்பன் M.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.Sc., M.Ed., அவர்கள் பரிசுக் கோப்பை பெறுதல்.

                                  1993 – 1994

1993 – 1994 பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக மகளிர் பள்ளி ஆய்வாளர்(பொறுப்பு)  உயர்திரு J.ஏர்னஸ்ட் M.A., M.Ed., அவர்களிடமிருந்து  தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் பரிசுக் கோப்பை பெறுதல்.

1993 – 1994 பன்னிரண்டாம் வகுப்புதேர்வில் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றமைக்காக காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உயர்திரு.R. கணபதிராஜன் B.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் சான்றிதழ் பெறுதல்.

1993 – 1994 ல் விருதுநகர் காமராஜர் முத்தமிழ் மன்றம் S.S.L.C. &  H.S.C தேர்வுகளில் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றமைக்கு அம்பாள் ராமசாமி நினைவுக்கேடயத்தை சிவகாசி அரசன் ஜெயசங்கர் அவர்கள் பள்ளித்தலைமை ஆசிரியையிடம் வழங்குதல்.

                              1994 – 1995

1994 – 1995 S.S.L.C. &  H.S.C தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உயர்திரு R.கணபதிராமன் B.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் சுழற்கோப்பை பெறுதல்.